Skip to content
Home » பாஜகவில் இணைந்தார் விஜயதரணி…

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி…

டில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜகவில் இணைந்தார் விஜய தரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் விஜயதரணி. கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த  நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பாஜகவில் இணைந்தார்.காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.

பின்னர்  விஜயதரணி கூறியதாவது… சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன்; தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது; மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது. பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது”. டில்லியில் காங்.கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!