Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் இரத்ததான முகாம்..

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. அந்தோணிசாமி, டாக்டர்.ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் எல். மருதுபாண்டியன் வரவேற்றுபேசினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் எம். பார்த்திபன் இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர்.எஸ்.சரவணன் பேசினார். இதில் கலந்து கொண்ட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரும் இரத்ததானம் வழங்கினர். ஏற்பாடுகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி உதவி மருத் துவ அலுவலர் பி. தேன்மொழி மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

error: Content is protected !!