Skip to content
Home » தமிழ்நாட்டில் 8050 பதற்றமான வாக்குச்சாவடி…….. சத்யபிரதா சாகு தகவல்

தமிழ்நாட்டில் 8050 பதற்றமான வாக்குச்சாவடி…….. சத்யபிரதா சாகு தகவல்

  • by Senthil

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.  181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 39 வாக்குச்சாவடிகள் உள்ளன.

மதுரையில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படும். பெயர் இல்லாமல் பூத் சிலிப் வழங்கப்பட மாட்டாது. இதுவரை 13 லட்சம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன .

ஓட்டு போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு.  வேட்பாளர்கள் பணம் கொடுக்கக் கூடாது; வாக்காளர்களும் பணம் வாங்கக் கூடாது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ப தபால் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. விருப்பம் தெரிவித்தவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது. 2 முறை தபால் வாக்குகளை வாங்க வீட்டிற்கு அதிகாரிகள் வருவார்கள். அதற்குள் தபால் வாக்குகளை செலுத்த வேண்டும், இல்லையென்றால் வாக்குப்பதிவு நாளில் நேரில் வந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!