நாமக்கல் மண்டலத்தில் கடந்த 28-ஆம் தேதி ரூ.112 ஆக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை, படிப்படியாகச் சரிந்து தற்போது ஒரு கிலோ ரூ.95 ஆகக் குறைந்துள்ளது. கொள்முதல் விலை சரிந்த போதிலும், சில்லறை கடைகளில் கறிக்கோழி கிலோ ரூ.250-க்கே தொடர்ந்து விற்கப்படுகிறது. இதனிடையே, முட்டைக்கோழி விலை ரூ.120 ஆகவும், முட்டை விலை 520 காசுகளாகவும் (ரூ.5.20) மாற்றமின்றி நீடிக்கிறது.
