தமிழக அரசு மேலும் ரூ.84,686 கோடி கடன் வாங்க உத்தேசம்….

53
Spread the love

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த இடைகால பட்ஜெட்டில்…. தமிழக பள்ளி கல்விதுறைக்கு ரூ.34,181கோடி, அம்மா கிளினிக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு. எல்ஐசி மற்றும் யுனைடட் இன்சூரன்ஸ் இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம். இதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் 2 லட்சம் ரூபாயும், விபத்தினால் மரணமடைந்தால் 4 லட்சம் ரூபாயும் இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும். இதற்கான செலவு தொகையும் தமிழக அரசு ஏற்கும். 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில் 2 ஆயிரம் பேருந்துகள் மின்சார பேருந்துகள் ஆகும். நடப்பு நிதி ஆண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1,33,530 கோடி, செலவீனம் ரூ.2,46,694, பற்றாக்குறை ரூ.65,994 கோடி ஆக இருக்கும். தமிழகத்தின் நிதி தேவைக்காக ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் செலவீனங்களை குறைத்த வகையில் ரூ.13,250 கோடி சேமிக்கப்பட்டு உள்ள்து. தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லுாாிகள் அமைக்க ரூ.2,470 கோடி ஒதுக்கப்படும். 

LEAVE A REPLY