Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபர்களை முட்டி தூக்கி வீசிய காளை-மிரண்டு ஓடிய வாகன ஓட்டிகள்

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி காளையின் மீது கல் மற்றும் பொருட்களை வீசினர். கோபமடைந்த காளை அவர்களை விரட்டியது. மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை மாடு முட்டி தூக்கி வீசியது. பின்னர் வேகமாக ரோட்டில் ஓடியது.

இதை பார்த்து பயந்து போன அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து பணியில் இருந்த போலீசார் அங்கே சென்று காளை எங்கே இருக்கிறது என தேடினர்.

குளக்கரையில் அந்த காளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பதுங்கியது. இதைத் தொடர்ந்து போலீசார் காளையின் உரிமையாளர் யார் அது தானாக கயிறு அவிழ்த்து வந்து விட்டதா யாராவது தவறுதலாக காளையை விட்டு சென்று விட்டார்களா என விசாரித்து வருகின்றனர். காங்கேயம் காளை ரோட்டில் பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!