Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொழிலதிபர் காரை மறித்து கொலை மிரட்டல்.. ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு

திருச்சி இப்ராஹிம் பார்க் அருகில் ஹார்டுவேர்ஸ் ஷோரூம் உள்ளது.இந்த கடையில் இரும்பு கம்பிகள் பிவிசி பைப்புகள் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கம்போல் கடையின் உரிமையாளர் வேலுசாமி இரவு 10 மணிக்கு ஷோரூ மை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் மறுநாள் வந்து கடையை திறக்க முயன்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த செப்பு கம்பி வயர் ,குழாய் உள்ளிட்ட சுமார் 15, ஆயிரம்மதிப்புள்ள பொருட்களை
மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து வேலுசாமி கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபானம் பதுக்கிய பெண் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராம்ஜி நகர் காந்தி நகர் பகுதியில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திவ்ய பிரியா தலைமையில் போலீசார் ராமஜெய நகர் காந்தி நகர் சென்று பார்த்த பொழுது அங்கு சுதாகர் என்பது மனைவி ராணி ( 64) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி கள்ள சந்தையில்விற்பனை செய்தது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 57 மது பாட்டில்களை பறிமுதல் செய்துராணியை கைது செய்துள்ளனர்.

தொழிலதிபர் காரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டல்… ரவுடி உட்பட 2 பேர் கைது

திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (46) இவர் தனது டிரைவருடன் கொட்டப்பட்டு அம்பாள் நகர் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது 5 வாலிபர்கள் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு அவ்வழியாக சென்ற நபர்களை மிரட்டி கொண்டு இருந்தனர். அப்பொழுது தொழிலதிபர் வடிவேல் கார் அந்த வழியாக சென்றது உடனே அந்த கும்பல் காரை நிறுத்தி வடிவேலிடம் தகராறு செய்து அவாளை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வடிவேல் பொன்மலைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த சிவராமன் (26) ஸ்ரீராம்( 24 )ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களில் சிவராமன் ரவுடி பட்டியலில் உள்ளார்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், பிலிக்ஸ், முத்துவேல் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!