கேரளம் மாநிலம் குட்டநெல்லூர் அருகே இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சாலையில் சென்றுள்ளது. அப்போது திடீரென லாரி பிரேக் அடித்த நிலையில், முன்னாள் பைக்கில் சென்ற இளைஞர் மீது இரும்பு கம்பிகளி சரிந்து விழுந்தன. இதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கம்பிகளை அகற்றி இளைஞரின் சடலத்தை மீட்டனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
லாரியிலிருந்து இரும்பு கம்பிகள் சரிந்து வாலிபர் உயிரிழப்பு
