சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் புதிதாக கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென அங்கு மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் பூமிநாதன் (37), மண்ணில் புதைந்தார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
