Skip to content
Home » மாற்றுத்திறனாளி குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா…. பரபரப்பு..

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா…. பரபரப்பு..

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவர்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள காந்திபுரம் 1-வது வீதியை சேர்ந்த தவுலத் என்ற பெண் அவரது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அப்பெண்ணையும் குழந்தையையும் அகற்ற முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு

பரபரப்பு சூழல் உருவானது. பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து தவுலத் கூறுகையில் தங்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 8 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் உள்ளதாகவும், அந்த இடத்தை தனக்குத் தெரியாமல் தனது உறவினர்கள் சிலர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த திமுக பிரமுகருக்கு விற்று விட்டனர் எனவும் அந்த இடத்தில் எனக்கு பங்கு வர வேண்டும் என்ற நிலையில் எனக்கு எந்தவித பங்கும் தரவில்லை என தெரிவித்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்த அவர் சுமார் 8 ஆண்டுகளாக இது தொடர்பாக போராடி வருவதாக தெரிவித்தார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வர வேண்டிய பங்கை மீட்டு தர வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டு தர்ணா செய்த பெண்ணால் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!