மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரின் பின்புற டயர் வெடித்து நிகழ்ந்த பயங்கர விபத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சென்னை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் பின்புற டயர் திடீரென வெடித்துச் சிதறியது.வரலாற்று நூல்களைப் படித்தல்
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த மாணவர்கள் 7 மாணவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
