அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, நண்பர்கள் பங்களிப்பில் புதிய ‘தொலைநோக்கியை’ வழங்கி மகிழ்ந்த அரியலூர் ஆட்சியர் மிருணாளினி: மாணவர்களின் வானியல் ஆர்வத்துக்கு இது உந்துதலாக அமையும் எனவும் நம்பிக்கை.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய விண்வெளி தின வினாடி வினாப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்ற பள்ளி மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந.மிருணாளினி கலந்துரையாடினார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேசிய விண்வெளி தின வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள

மகேந்திரகிரி இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிக்கான பயிற்சியும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
அந்த மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, அவர்களை நேரில் அழைத்துப் பாராட்டி புத்தகங்கள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்து பேசிய

அவர்…
மாணவர்கள் தேவையற்ற மாற்று சிந்தனைக்கு போகாமல் தடுக்க அவர்களை விளையாட்டு, ஓவியம், கலைத்துறை போன்றவற்றில் ஈடுபடுத்துவதைப் போல, வானியல் குறித்த

ஆர்வத்தையும் தூண்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர் அந்த மாணவியர்களின் இஸ்ரோ அனுபவம் குறித்து கேட்டறிந்த ஆட்சியர் மிருணாளினி, தஞ்சாவூர் வானியல் மற்றும் அறிவியல் கழகம் சார்பில் “தொலைநோக்கி” மூலம் பள்ளி மாணவியர், மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து சூரியன் மற்றும் கோள்களின் வானியல் நிகழ்வுகளை பார்வையிட ஏற்பாடு செய்தார்.
மாணவியர்களைத் தொடர்ந்து, ஆட்சியரக ஊழியர்களும் சூரியன் உள்ளிட்ட கோள்களின்

வானியல் நிகழ்வுகளை தொலைநோக்கி வழியாக கண்டு ரசித்தனர்.
மேலும், அரியலூர் மாவட்டம், வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை தொலைநோக்கி வாயிலாக கோள்கள் மற்றும் நிலவினை பொதுமக்கள், குழந்தைகள் பார்வையிடவும் சிறப்பு ஏற்பாட்டினை செய்த ஆட்சியர் ந.மிருணாளினி, ஆட்சியரகத்தில் தம் அலுவல் பணி முடிந்த கையுடன் அருங்காட்சியகம் சென்று அங்கு பொதுமக்களுடன் இணைந்து வானியல் நிகழ்வுகளை பார்வையிட்டார்.
அப்போது வந்திருந்த குழந்தைகளுடன் ஆர்வமுடன் கலந்துரையாடி, அவர்கள் வானியல் நிகழ்வுகளை தொலைநோக்கி வழியாக பார்வையிட உதவியும் செய்து மகிழ்ந்தார் ஆட்சியர் ந.மிருணாளினி.
இந்நிலையில் புவி-Space Science Club வழங்கிய இந்த தொலைநோக்கி கருவியை தஞ்சாவூர் வானியல் மற்றும் அறிவியல் கழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினியிடம் வழங்கினர்.
அதனைப் பெற்று ‘வாரணவாசி புதை படிம உயிரி அருங்காட்சியகத்திற்கு’ வழங்கி மகிழ்ந்தார் ஆட்சியர் மிருணாளினி.
வரும் நாட்களில் இந்த தொலைநோக்கியை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் வாரணவாசி அருங்காட்சியத்திலேயே வைத்து, அங்கு வரும் பள்ளி மாணவர்களுக்கு வானியல் தொடர்பான நிகழ்ச்சிகளை வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல் மூலம் அறிந்து கொள்ள செய்வதுடன், இஸ்ரோ நடத்தும் போட்டி மற்றும் project-களுக்கு ஏற்ப தயார் செய்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
வானிலை தொடர்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்தும், அவர்களுக்கு வானிலைப் பற்றிய புரிதல் ஏற்படவும் தொடர்ந்து பங்காற்றிவரும் தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி குழந்தைகள் கற்கும் விதமாக தங்களது பங்களிப்பாக இந்த கருவியை அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வானியல் குறித்த ஆர்வத்தை வளர்த்து, அறிவைப் பெருக்கிட உதவும் எனவும் ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.
