Skip to content
Home » ‘கூகுள் மேப்’ காட்டிய வழி.. படிக்கட்டுகள் சிக்கிய கார்.. ஊட்டியில் சம்பவம்..

‘கூகுள் மேப்’ காட்டிய வழி.. படிக்கட்டுகள் சிக்கிய கார்.. ஊட்டியில் சம்பவம்..

  • by Senthil

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் ஊட்டிக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரள மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். தொடர் விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையில், கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள், தங்களது சொந்த காரில் நீலகிரிக்கு சுற்றுலா வந்துவிட்டு, பின்னர் சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டிருந்தனர். ‘கூகுள் மேப்’ காட்டிய வழியில் கார் சென்று கொண்டிருந்தது. ஒரு சிறிய சந்து பகுதியை கூகுள் காட்டியது. அவ்வழியாக காரை திருப்பி செல்லஆரம்பித்தார். திடீரென செங்குத்தான படிக்கட்டுகள் வந்ததால், அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர், படிக்கட்டுகளில் காரை நிறுத்திவிட்டு, செய்வதறியாது திகைத்தார். இதன் பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உதவியுடன் ஒருமணிநேர போராட்டத்திற்கு பிறகு படிக்கட்டுகளில் கற்களை அமைத்து கார் சாலைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் நிம்மதியாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!