Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

யூ டியூபர் சவுக்கு சங்கர்  பெண் போலீசாரை  இழிவுபடுத்தி  வெளியிட்ட செய்தி தொடர்பாக அவர் மீது  கோவை   மாநகர சைபர் கிரைம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் தேனியில் இருந்தபோது அவரை கோவை போலீசார் கைது செய்தனர்.    இன்று  காலை அவரை  போலீசார் கோவை அழைத்து வந்தபோது  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது வாகனத்தின் மீது ஒரு கார் மோதியது. இதில் போலீஸ் வாகனத்திற்கு லேசான சேதம் ஏற்பட்டது.

போலீஸ் வாகனத்தில் இருந்த  காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.  இதனையடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், பெண்களை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை இன்று  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!