செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருப்பவர் கோமளா. இவரது கணவர் வெங்கடேசனை வெட்டிய வழக்கில், தவெக கிளைச் செயலாளர் ரஞ்சித்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ரஞ்சித்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வார்டு உறுப்பினரின் கணவரை வெட்டிய வழக்கு.. தவெக நிர்வாகி கைது
