Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் இன்று கூடியது

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும்மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து இருந்தது.

இந்த நிலையில், காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டில்லியில் இன்று (30-10-2023) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டி ல்லியில் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த  கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை தரும்படி  கோரிக்கை வைக்கப்படும் என தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!