Skip to content
Home » காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Senthil

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும், காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.90 டிஎம்சி தண்ணீர்தான் வந்தது.

ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரும் வழங்காமல் உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிரைக் காப்பாற்ற காவிரியில் மாத வாரியாக கர்நாடகம் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கர்நாடகம் தர வேண்டிய 122.57 டிஎம்சி தண்ணீர் மிக முக்கியமானது.
எனவே, டெல்டா மாவட்ட குறுவை சாகுபடியைப் பாதுகாக்க உடனடியாக தண்ணீர் விட கர்நாடகம் முன் வர வேண்டும். கர்நாடகத்தில் பருவ மழை பொய்த்திருந்தாலும், பற்றாக்குறை கால விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் விட வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை காவிரி நதிநீர் ஆணையமும், ஒன்றிய அரசும் மேற்கொள்ள வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில்  அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள தாலுகா  தலைமையிடங்களில் வரும்  25 ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், தலைவர் பி. செந்தில்குமார் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!