Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய 2 நாட்களும் தமிழகத்தில் கனமழை செய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கையில் சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது, வரும் ஆகஸ்ட் 17ம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அது போல வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தவிர இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக கனமழை பெய்யும் போது சில இடங்களில் வலுவான இடி மற்றும் மின்னல் தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

error: Content is protected !!