Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சந்திரபாபு நாயுடுக்கு 2 நாள் போலீஸ் காவல்…..

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்து லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்து லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!