Skip to content
Home » சந்திரயான் 3…… சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…

சந்திரயான் 3…… சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…

  • by Senthil

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது.  வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது.

இந்த நிலையில், சந்திரயான் விண்கலத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதையின் உயரம் 2-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ந் தேதி முதல் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும் நிலையில் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை 174 கி.மீ* 1437 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23-ந் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிரங்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!