Skip to content
Home » சந்திரயான் 3… இன்று மதியம் விண்ணில் பாய்கிறது

சந்திரயான் 3… இன்று மதியம் விண்ணில் பாய்கிறது

  • by Senthil

‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4′ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. சந்திரயான் 3’ விண்கலத்தில் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள ‘புரபுல்சன்’ பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது. பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் .

ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.  இந்தியாவின் லட்சிய நிலவுப் பயணம் இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது. இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 முயற்சி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது வெற்றிகரமாக நிலவில் இறங்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது வெற்றிகரமாக அமைந்தால் உலகில் நிலவில் இறங்கிய 4வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!