Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய குடோன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் ஒரு பகுதியில் கரும்புகை வெளியேறியதை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரும்புகை விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்துள்ளது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!