Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையை அடுத்த புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

சென்னை புழல் பகுதியில் உள்ள மத்திய சிறை வளாகத்திற்கு இன்று காலை வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்குள்ள சிறை கைதிகளின் வசதிகள், உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, புழல் காவல் நிலையத்திற்கும் அவர் திடீரென நேரில் சென்றார்.

காவல் நிலைய ஆய்வின் போது, பொதுமக்களால் அளிக்கப்படும் கோரிக்கை மற்றும் குற்றப் புகார்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதைப் பதிவேடுகளைப் பார்த்து ஆய்வு செய்தார். மேலும், அங்குப் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசுகையில், பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!