Skip to content
Home » குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கொடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் சில நாட்களாக பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் (குழந்தைகள்) கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வாரியங்காவல் கண்டியங்கொல்லை வடக்கு தெரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில முதியவர் குழந்தையை கடத்துவதாக தவறான புரிதல் காரணமாக பொதுமக்கள் தாக்கி காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் வட மாநில முதியவரை தாக்கிய பொதுமக்கள் 100 பேர் மீது ஜெயங்கொண்டம்போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், சந்தேக நபர்களை அடித்து துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் சமூக வலைதளங்களில் தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!