ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலைக்கு தூண்டப்படும் நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கடன் தொடர்பான ‘ஆப்’ கள் மூலமும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ‘ஆப்’ களில் குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கிய அதற்கு வட்டி என்ற பெயரில், பல்வேறு நிபந்தனைகளை திணித்து பெரிய தொகையை கட்டுமாறு வலியுறுத்துகின்றனர். அவ்வாறு தவணையை கட்ட மறுக்கும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் ஆப் களை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் 138 சூதாட்ட ‘ஆப்’ கள் மற்றும் 94 கடன் ‘ஆப்’ களை தடை செய்யவும், முடக்கவும் தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் 138 சூதாட்டம் மற்றும் 94 கடன் “ஆப்” களுக்கு தடை…

Tags:சீனா (tag)