Skip to content
Home » சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,), மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நiபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 27, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர்நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,), வேட்பாளர்களால் மேற்கொள்ளப்படும் தேர்தல் செலவினங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணாவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் செலவின கணக்குகள் தொடர்பான தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்தும் பணிகள் மேம்பாடு குறித்தும் உரிய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் செலவினப் பார்வையாளரின் 9363865089 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி.ராஷ்மி ராணி, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை கங்காதாரிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்) ஷீஜா (உடையார்பாளையம்), மாவட்ட வழங்கல் அலுவலர் (பெரம்பலூர்) சுந்தர்ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் (புவனகிரி) ராஜீ, உதவி ஆணையர் (கலால்) காட்டுமன்னார்கோவில், சந்திரகுமார் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!