Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்- 50 பயனாளிகளுக்கு ரூ.3.52 கோடி நிதியுதவி–அமைச்சர் வழங்கினார்!

கரூர்- 50 பயனாளிகளுக்கு ரூ.3.52 கோடி நிதியுதவி–அமைச்சர் வழங்கினார்!

கரூரில் ரூ.3.52 கோடி மதிப்பில் 50 பயனாளிகளுக்கு கடன் உதவி மற்றும் விபத்து நிவாரணத் தொகை – அமைச்சர் விஜயலட்சுமி வழங்கினார்.

கரூர் மாவட்டம் மணல்மேடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்திய கல்விக் கடன் விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி விஜயலட்சுமி

சின்னசாமி, மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் இணைந்து, 50 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 52 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பணியிட விபத்து நிவாரண உதவித்தொகைகளை வழங்கினர்.

தொடர்ந்து, நடைபெற்ற கல்விக் கடன் விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் முகாமை அமைச்சர் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

error: Content is protected !!