Skip to content
Home » நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது…. தலைவர்கள் சென்னையில் முற்றுகை

நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது…. தலைவர்கள் சென்னையில் முற்றுகை

இந்தியா  முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுவதால், தேசியமற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி,மல்லிகார்ஜுன கார்கே ,முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணிநேரம் முன்னதாக என்ற அடிப்படையில், நாளை (ஏப்ரல் 17, புதன்கிழமை) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையொட்டி, அனைத்து தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட பிரசாரம் நடைெதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது: தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுவதால், 17-ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அந்த நேரத்துக்குள் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.(வழக்கமாக மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடையும். தற்போது கோடை வெயில்  அதிகமாக உள்ளதால்,  ஒரு மணி நேரம் நீடித்து கொடுக்கப்பட்டுள்ளது)

அதன்பிறகு, அமைதி பிரசாரம் உள்ளிட்ட எந்த விதமான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை. தவிர,மாலை 6 மணிக்கு மேல் அந்தந்த தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!