டென்மார்க் செல்ல கெஜ்ரிவாலுக்கு அனுமதியில்லை

197
Spread the love

 ஐரோப்பிய நாடான டென்மார்கில், தட்ப வெப்ப மாற்றம் குறித்த மாநாடு, இன்று துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 100க்கும் அதிகமான மேயர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பி, வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் விண்ணப்பித்தார். ஆனால் நேற்று வரை அனுமதி வழங்கப்படவில்லை. இது பற்றி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், கூறியதாவது:டென்மார்க்குக்கு விடுமுறையில் செல்ல, கெஜ்ரிவால் அனுமதி கேட்கவில்லை. பதில் இல்லை அங்கு நடக்கும் தட்ப வெப்ப மாநாட்டில் பங்கேற்கவே அனுமதி கேட்டார். மாசு கட்டுப்பாட்டை குறைக்க, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த மேயர்களுடன் விவாதிக்கவே, டென்மார்க் செல்ல கெஜ்ரிவால் விரும்பினார். ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி கேட்டு, கெஜ்ரிவால் கடிதம் அனுப்பினார். ஆனால், இதுவரை பதில் வரவில்லை. எங்களிடம் மோடி அரசு, விரோதமாக நடந்து கொள்வதற்கான காரணம் தெரியவில்லை. இவ்வாறு, சஞ்சய் சிங் கூறினார். கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, எந்த தகவலும் வரவில்லை.

LEAVE A REPLY