Skip to content
Home » பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து 8 ½ கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்…

மேலும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை முத்துசாமி 2023-2024ம் ஆண்டிற்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான

விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளார்.

இதனைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலினிடம் இன்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் 2023-24ம் ஆண்டிற்கான வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தி்த்து வாழ்த்துப் பெற்றார். உடன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை

மாற்றத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் , சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் உள்ளனர்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றுமு் வௌிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 2023-2024ம் ஆண்டிற்கான சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான

விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!