Skip to content
Home » நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

  • by Senthil

தர்மபுரியில் இன்று காலை நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி  ஆகிய 3 மாவட்டங்களுக்கான முத்தான திட்டம் இது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும்  அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  அவ்வையாார் வாழ்ந்தால்,  தமிழ் வாழும் என்று எண்ணியஅதியமான ஆட்சி செய்த மண் தான் இந்த தர்மபுரி.

தர்மபுரி என்று சொன்னதும் என் நினைவுக்கு வருவது ஒகேனக்கல். இந்த கூட்டு குடிநீர் திட்டத்துக்காக நான் ஜப்பான்  சென்று  நிதி உதவி பெற்று வந்தேன்.  அது நினைவுக்கு வருகிறது. முதல்வர் கலைஞர்  ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை  தொடங்கி வைத்தார். ஆட்சி மாறியதும் காட்சி மாறியது.   திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். அப்போது நானே இங்கு வந்து போராட்டம் நடத்தினேன். அந்த வகையில் தர்மபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க பாடுபட்டேன்.

இதே தர்மபுரியில் தான் மகளிர் சுய உதவிக்குழுவை  கலைஞர்  தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் செய்யும் முகாமை நான் இங்கு தான் தொடங்கிவைத்தேன். இந்த இரு திட்டங்களும் மகளிர் வாழ்வில் ஒளியேற்றும் திட்டம்.

உரிமைத்தொகை வழங்குவோம் என தேர்தலில் சொன்னோம். அதை நிறைவேற்றி காட்டி உள்ளோம். இந்த திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 கொடுக்கிறோம். இந்த உரிமைத் தொகை பெற்ற சகோதரி ஒருவர், இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் என்றார்.  அந்த குடும்ப பாசத்தை எண்ணி நெகிழ்ந்து போனேன். இந்த திராவிட மாடல் அரசு செய்த திட்டங்களை சொல்ல வேண்டுமானால் நாள் முழுவதும் ஆகும்.

இலவச பஸ் பயணம் மூலம் பெண்கள் தங்கள் வருமானத்தை சேமிக்கிறார்கள். காலை உணவுத்திட்டம் மூலம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். இல்லம் தேடி கல்வி மூலம் 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிகள் பயன் பெறுகிறார்கள்.  2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம்.  நம்மை காக்கும் 48  திட்டம் மூலம் 2லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் 23 லட்சத்து 9 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர். இந்த திட்டங்கள்  சரியாக செயல்படுகிறதா என்பதை அறிய நீங்கள் நலமா என்ற திட்டம் மூலம் நானே நேரடியாக மக்களிடம் பேசுகிறேன். எனவே தான் இந்த அரசை மக்களின் மனசாட்சி என சொல்கிறேன். இந்த அரசு மூலம் மகளிர், மாணவர், உழவர், உழைப்பாளர், மாற்றுத்திறனாளிகள் என ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து செயல்படுத்துகிறோம்.

இப்படி வேறு எந்த அரசும் திட்டங்களை செயல்படுத்தியதா, அவர்களால் இப்படி பட்டியல் போட முடியுமா? அவர்களால் சுரண்டத்தான் முடியும். 10 ஆண்டுகள் சுரண்டினார்கள். சாதனைகள் தான் செய்யவில்லை.  வேதனைகளை செய்துள்ளனர். விவசாய கல்லூரி மாணவிகள் என்ன ஆனார்கள் என்பது எல்லோருக்கும்  தெரியும். வேறு எதையும் நான் இங்கு  சொல்ல விரும்பவில்லை.

பஸ் வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு பஸ் வசதி  தொடங்கி வைத்தேன்.  ஒகேனக்கல் 2ம் கட்ட திட்டம் ரூ.7 ஆயிரம் கோடியில் தொடங்கி வைக்கப்படும். அதிமுக ஆட்சியில் ஒகேனக்கல் திட்டத்தை முடக்கினார்கள்.  மொரப்பூர்- தர்மபுரி 2வது அகல ரயில்பாதைக்கு இடம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரை  ரூ.12 கோடியில் சாலை அமைக்கப்படும்.

வாச்சாத்தி கொடுமையை யாரும்  மறந்திருக்க மாட்டீர்கள். எந்த ஆட்சியில் நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். அவர்களுக்கு யார் நிவாரணம் வழங்கினார்கள், திராவிட மாடல் அரசு தான் அவர்களுக்கு நிவாரணம் வழங்கியது.  தர்மபுரி மாவட்டம் பாரதிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். ஓசூர் பகுதியில் நடமாடும் மருத்துவமனை தொடங்கப்படும்.

செட்டிச்சாவடி குப்பைமேடு அகற்றப்படும்.  சேலம் மாவட்டத்தில் 210 கிலோ மீட்டரில் தார்சாலை அமைக்கப்படும். 76 கி.மீ. கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும்.  இப்படி எப்போதும் உங்களுக்காகவே  செயல்படும் அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு. ஆனால் பாஜக இப்படி மக்களை   ஒன்றிய அரசு  எல்லா மாநிலங்களையும் சமமாக நடத்துகிறதா, மாநிலங்களை அழிக்க நினைக்கிறது. மாநிலங்களை அழிப்பதன் மூலம் நமது மொழி, இனத்தை அழிக்க நினைக்கிறது.  மாநில வளர்ச்சிக்கான ஆக்சிஜனை நிறுத்துகிறது. அதைத்தான்  இப்போது செய்கிறது. மாநிலங்கள் வளர்த்தால் தான் ஒன்றி்ய அரசு . ‘

தேர்தலுக்காக பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். அவரது சுற்றுப்பயணத்தை வெற்றுப்பயணமாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ்சுக்கு இப்போது தான் கட்டுமான பணி நடக்கி்றது. மக்களை ஏமாற்றும் செயல் வேறு என்ன இருக்க முடியும் சென்னை, வெள்ளத்தையும், தூத்துக்குடி  வெள்ளத்தையும் பார்க்க வராத மோடி இப்போது ஓட்டு கேட்டு வருகிறார் என மக்களுக்கு தெரியும்.

நிதியை கொள்ளை அடிக்க நான் விடமாட்டேன் என்கிறார் மோடி. என்ன நிதி கொடுத்தீர்கள்.  தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி 20 ஆயிரம் கோடி தரல. மெட்மோ  2ம் கட்ட திட்டத்துக்கு நிதி தரல. வெள்ள நிவாரணம் தரல பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில்   75சதவீதம்  மாநில அரசு தான் கொடுக்கிறது.. ஜல்ஜீவன் திட்டத்துக்கு மாநில அரசு தருவது 50 விழுக்காடு. மாநில திட்டத்தில் பிரதமர் ஸ்டிக்கல் ஒட்டுகிறார்.  மத்திய அரசு மாநிலங்களை மதிக்க வேண்டும். வளர்க்க  வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு வரி வருமானம் எங்கிருந்து வருகி்றது. மாநில மக்கள் கொடுக்கிற வரி தான் ஒன்றிய அரசுக்கு.  வெறும் கையால் முழம் போடுகிறார் மோடி. தேர்தல் நேரத்தில் தான் மோடிக் கு  மக்கள் மீது பாசம் பொங்கும். இதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.   மாநிலங்களை நிதி ஆதாரங்களை பறித்து,  மாநிலங்களை அழிக்கிற நினைக்கிறது மத்திய அரசு.மக்களும், திமுகவும் ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என்கிறார்கள்..  இது குடும்ப ஆட்சி தான். இது குடும்ப விழாவாகத்தான்  நடக்கிறது. இந்தியாவுக்கு வழிகாட்டியாக நாம் மாறுவோம்.  கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கான ஆட்சி் இது.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!