Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை

முரசொலி செல்வம் மறைவு தொடர்பாக  தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
”கலைஞர் மறைவுக்குப் பின் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கலைஞரும், முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்திலும், செயலிலும் நிறைவேற்றியவர் முரசொலி செல்வம் எனவும், மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும், நகைச்சுவை ததும்பும் கட்டுரைகள் இளம் தலைமுறையினருக்கு கொள்கை ரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவயது முதலே எனக்கு அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், கட்சிப்பணிகளில் ஆலோசனை வழங்கி, நெருக்கடி நேரங்களில் தீர்வுகளை முன்வைத்து தோளோடு, தோள் நின்றவர் முரசொலி செல்வம்” எனவும் மு.க.ஸ்டாலின் தமது இரங்கல் குறிப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!