Skip to content
Home » திமுக, காங். வேட்பாளர்களை ஆதரித்து…..தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

திமுக, காங். வேட்பாளர்களை ஆதரித்து…..தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

  • by Senthil

 தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.  இன்று தர்மபுரியில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். தர்மபுரி அடுத்த தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6மணிக்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!