தமிழக முதல்வர் விஜய் வருகையையொட்டி திருச்சியில் டிரோனகள் பறக்கத்தடை
20.11.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள்அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 20.11.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. (அனுமதி அளிக்கப்பட்டதை தவிர)
எனவே 20.11.2026 அன்று தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள், தெரிவித்துள்ளார்.
