Skip to content
Home » டெல்டாவில் நிலக்கரி திட்டம்…..தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் எதிர்ப்பு

டெல்டாவில் நிலக்கரி திட்டம்…..தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் எதிர்ப்பு

தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க  மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது.  இது டெல்டா விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில சூழலியல் உபகுழு நிர்வாகிகளான மாநில துணைத்தலைவர்  சேதுராமன்,  நிர்வாகிகள் பொன்முடி, ரமேஷ்,  சங்கரலிங்கம் ஆகியோர் மன்னார்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் மன்னார்குடி பழுப்புநிலக்கரி  வட்டாரத்தில், 68 சதுரகிமீ கொண்ட வடசேரி பழுப்பு:நிலக்கரிப் பகுதியில் நிலக்கரியாகவோ,நிலக்கரி படுகை மீதேனாகவோ மற்றும் நிலந்தடி நிலக்கரியை வாயுலாக வோ எடுக்கும் திட்டங்களை செயல்படுத்துவதாகு கடந்த 29.3.2023 அன்று ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் அழைப்பானைவிடுத்துள்ளது.

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிலக்கரி எடுப்புத் திட்டத்தின்  பகுதியாக நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதை சார்ந்த பொருட்களை எடுக்க விடுக்கப்பட்ட அழைப்பாணையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை

1. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள மைக்கேல் பட்டி நிலக்கரி பகுதி

2.கடலூமாவட்டம் கிழக்கு சேத்தியாத்தோப்பு நிலக்கரி பருதி

3 தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய வடசேரி நிலக்கரி பகுதிஆகியவை.ஆகும்.

அந்த அழைப்பாணையின் படி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் மே 30 ஆகும் மேற்கண்ட 101 இடங்களுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களுள், தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் குறித்து, தேர்வு குழுவால், 2023 ஜூவை 14 அன்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை அண்டமி, மோகூர் கருப்பூர், பரவாத்தூர், கண்ணுகுடி, கொடியாளம், வடசேரி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரப்பேட்டை, கூப்பாச்சிக் கோட்டை, பரவாக்கோட்டை மற்றும் தளிக்கோட்டை உள்ளடக்கிய பகுதிகள் வடசேரி நிலக்கரி பகுதியில் உள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்ட ஏலத்தில் தேர்வு பெறும் நிறுவனம் மேற்கண்ட பகுதியில் நிலக்கரி, நிலக்கரி படுகை மீத்தேன் மற்றும் நிலத்தடி நிலக்கரி  வாயு என்று எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அங்கு உள்ள கனிம வளத்தை எடுத்துக் கொள்ளலாம். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு எந்தவொரு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு சட்டம்இயற்றியுள்ளது. மேலும் நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்திற்கு தஞ்சை மற்றும்திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் கடந்த 2015 ம் ஆண்டில் பிறப்பித்த நிரந்தர தடையும் அமலில் உள்ளது.

முப்போகம் நெல், தென்னை உள்ளிட்ட பணப்பயிர்களை விளைவிக்கும் பல லட்சம் ஏக்கர் கொண்ட பிரதான விவசாயப் பகுதியான மேற்கண்ட பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், விவசாயத்திற்கும், நில வளத்திற்கும், நிலத்தடி நீருக்கும் எதிரானது.

தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இந்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் காவிரி டெல்டா பகுதியில் ஏலம் விடப்பட்டுள்ள நடவடிக்கை தமிழ்நாடு அரசின் பாதுகாப்பு மண்டல அரசாணைக்கு எதிராக உள்ளது. ஆகவே ஒன்றிய அரசு உடனடியாக மேற்கண்டஅழை ப்பாணையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள தமிழகப் பகுதிகளை விலக்கிக்கொள்ள வேண்டும்

‘வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் அடுத்த 5ஆண்டுகளில் வேளாண் மண்டலத்தில் 1000 கோடி முதலீட்டில் வேளாண் சார்ந்த தொழில்களை கொண்டுவருவதாக அறிவித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்பதோடு, நிலக்கரி ஏல அறிவிப்பு தொடர்பாக உடனடியாகத் தலையிட்டு ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்‘

இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!