Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜகவிலிருந்து கோவை தெற்கு மா.மு.தலைவர் கே.வசந்தராஜன் விலகல்

தமிழக பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவையிலும் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தற்போது விலகியுள்ளார்.

பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவரான கே. வசந்தராஜன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த வசந்தராஜன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையின் ராஜினாமா விவகாரத்தைத் தொடர்ந்து, கோவையின் முக்கிய முகங்களில் ஒருவரான வசந்தராஜனின் இந்த விலகல், கொங்கு மண்டல பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜகவின் வலுவான தளமாகக் கருதப்படும் கொங்கு பகுதியில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு முக்கிய நிர்வாகி கட்சியை விட்டு விலகியிருப்பது, வரவிருக்கும் அரசியல் நகர்வுகளில் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் கட்சிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!