Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாமனாரை அரிவாளால் வெட்டிய… கலெக்டர் அலுவலக கார் டிரைவர்

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.
இவருக்கும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வேங்கூர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 61) என்பவரது மகள் ராஜேஸ்வரிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் 6 மாதத்திற்கு முன்பு ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு திருவெறும்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அதன் பின்னர் கணவர் குடும்பம் நடத்த அழைத்த போதிலும் செல்ல மறுத்துவிட்டார். இந்த நிலையில் சிவகுமார்,
தஞ்சாவூர் பூதலூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் மணிகண்டன் 43 என்ற தனது நண்பரை அழைத்துக் கொண்டு திருவெறும்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு மாமனார் மகாலிங்கத்திடம் வலியுறுத்தினார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவகுமாரும், மணிகண்டனும் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் மருமகன் சிவக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!