திருச்சியில் கல்லூரி மாணவன் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் அனிதா பானு (வயது 44) இவரது மகன் அர்சத் (வயது 17) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் அர்சத் கடந்த 8 ஆம் தேதி தனது சித்தியின் மகன் அல்தாப் வுடன் இருவரும் திருச்சி சுப்பிரமணியபுரம் கம்பர் தெருவில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது அர்சத் நண்பரின் வீட்டில் மூன்றாவது மாடியில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது பட்டாசு வெடிக்கப்படுவது வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தார்.அந்த நேரத்தில் திடீரென்று துரதிஷ்டமா அர்சத் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயப்படுத்த அர்சத் சுயநினைவை இழந்தார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் அர்சத் திருச்சி அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற அர்சத் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
