Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் உள்ளது…. கரூரில் கோபிநாத்….

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் செயல்படும் அன்னை மகளிர் கல்லூரியில் பதினாறாம் ஆண்டு ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலையப்ப சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் தங்கராஜ், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி, முதல்வர் சாருமதி, கல்லூரியின் முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, அறங்காவலர் மாரியப்பன் உள்ளிட்ட கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நீயா நானா புகழ் கோபிநாத் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளிடையே

சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது, உறவினர்கள் சொல்வதற்காக நான் ஏன் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும். என கேள்வி கேட்ட இளைய சமுதாயத்தினர்,தற்போது சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று உங்களை ஒரு மனிதராக சமுதாயம் அங்கீகரிக்காமல் ஒரு டேட்டாவாக அங்கீகரிக்கிறது. சோசியல் மீடியாவில் உங்களைப் பற்றி குறிப்புகளை தெரிவித்துவிட்டால் அந்த விபரப்படி கடைசிவரை காப்பாற்றுவதற்காக உங்கள் நேரம் முடிந்து விடும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!