Skip to content
Home » காங். 2ம் கட்ட வேட்பாளர் ….. கெலாட் மகனுக்கு சீட், சச்சின் பைலட் பெயர் மிஸ்ஸிங்

காங். 2ம் கட்ட வேட்பாளர் ….. கெலாட் மகனுக்கு சீட், சச்சின் பைலட் பெயர் மிஸ்ஸிங்

  • by Senthil

மக்களவைத் தேர்தலுக்கு இரண்டாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி  நேற்று அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் காங்கிரஸ் வெளியிட்டது.

2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். இதில் அசாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அறிவிக்கப்பட்டுள்ள 43 வேட்பாளர்களில் 25 பேர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் மகன் நகுல்நாத் மத்தியப் பிரதேசத்தின் சிந்திவாரா தொகுதியில் போட்டியிடுகின்றனர். அசோக் கெலாட்டின் மகன் வைபர் கெலாட் ஜல்லூர் (ராஜஸ்தான்) தொகுதியில் போட்டியிருகிறார்.

காங்கிரஸின் இரண்டாவது பட்டியலில் சச்சின் பைலட்டின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!