Skip to content
Home » மாநில தலைநகரங்களில் 12-ந் தேதி காங்கிரஸ் போராட்டம்…

மாநில தலைநகரங்களில் 12-ந் தேதி காங்கிரஸ் போராட்டம்…

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு எதிராக ராகுல் காந்தி வலுவாக போராடி வருகிறார். இந்திய ஒற்றுமை பயணத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய வரலாற்று உரையில் மோடிக்கும்-அதானிக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தி இருந்தார். இதன் விளைவாக ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு பா.ஜனதா மோசமான தந்திரத்தை கையாண்டுள்ளது. ஆனாலும் மனம் தளராத ராகுல் காந்தி, மத்திய அரசை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் மக்களின் குரலாகவும், மக்கள் நம்பும் தலைவராகவும் விளங்கி வருகிறார். இதனால் காங்கிரஸ் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் இந்த தவறான மற்றும் பழிவாங்கும் தகுதி நீக்கத்துக்கு எதிராக போராடி வருகிறது. எந்த சார்பும் இல்லாமல், நீதி மற்றும் சுதந்திரத்தின் சக்தி களுடன் நிற்குமாறும், ஜனநாய கத்தின் இந்த முடக்குதலை எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் 140 கோடி இந்தியர்களையும் கேட்டுக்கொள்கிறோம். ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 முதல் மாலை 5 மணி வரை, ஒவ்வொரு மாநில தலைநகரிலும் உள்ள மகாத்மா காந்தி சிலைகள் அருகே காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் ‘மவுன சத்தியாகிரகம்’ நடத்துகின்றன இவ்வாறு கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!