கேரள முதலமைச்சராக சதீசன் பொறுப்பேற்பார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. கேரளாவின் முதலமைச்சர் யார்? என கடந்த 11 நாட்களாக இழுபறி நீடித்த நிலையில் இ ன்று அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த சதீசன் தற்போது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 63 இடங்களிலும், அதன் கூட்டணியில் இருந்த ஐயுஎம்எல் 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பாவூர் தொகுதியில் 6வது முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார் வி.டி.சதீசன்.
கேரள முதல்வராக சதீசன்… காங்கிரஸ் அறிவிப்பு
