Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடியில் புதிய நீதிமன்றப் பணிகள் தீவிரம் – உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!

தூத்துக்குடியில் புதிய நீதிமன்றப் பணிகள் தீவிரம் – உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார், மாவட்ட நீதிமன்றங்களையும், எட்டையாபுரம் ரோடு சங்கரப்பேரி பகுதியில் கட்டப்பட உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்குப் புதிதாகக் கட்டப்படவுள்ள நீதிமன்றப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தார். தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்த உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமாருக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி சுபா தேவி தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.பி. வாரியார், செயலாளர் எஸ்.எஸ்.பி. அசோக் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டான்லி பிரபு, முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், ஜோசப் செங்குட்டுவன், தனசேகர் டேவிட் உள்ளிட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிபதி செந்தில்குமாருக்குச் சால்வைகள் மற்றும் பூச்செண்டுகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தூத்துக்குடியில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதுடன், அதுகுறித்துக் சில முக்கிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

பின்னர், தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு சங்கரப்பேரி அருகே கட்டப்பட உள்ள தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, ஒருங்கிணைந்த நீதிமன்றப் பணிகளை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிபதியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

error: Content is protected !!