Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மச்சாது நகரைச் சேர்ந்தவர் ஆதி லிங்கம் மகன் சண்முகவேல், (55). இவர் நேற்று தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தூத்துக்குடி – எட்டையாபுரம் ரோட்டில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, அதே திசையில் உப்பு லோடு லாரியை ஓட்டி வந்த ராஜகோபால், வடக்கு நோக்கி திரும்புவதற்காக லாரியை U-Turn எடுத்துள்ளார்.

அப்போது லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், சண்முகவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து லாரி டிரைவர் ராஜகோபாலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!