Skip to content
Home » கொரோனா…. இந்தியாவில் ஒரே நாளில் 27 பேர் பலி

கொரோனா…. இந்தியாவில் ஒரே நாளில் 27 பேர் பலி

  • by Senthil

2019 ம் வருடத்தில்  தோன்றிய  கொரோனா வைரஸ் 2020 ம் வருடத்தின் தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்கிய பிறகு உருமாற தொடங்கியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. அதன் பிறகு டெல்டா பிளஸ் என்ற இரண்டாவது மோசமான அலை உருவானது. இதில் தான் நிறைய உயிர்கள் பறிக்கப்பட்டது.

2021 ம் வருடம் ஓமைக்ரான் என்ற புதிய வடிவத்துக்கு மாறி அதனுடைய ஆட்டம் முடிவுக்கு வரத் தொடங்கியது. தற்போது இந்தியா முழுக்க எக்ஸ் பிபி.1.16 வகை வைரஸ் தான் மிக மிக வேகமாக பரவிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்றுஉலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. இந்த வைரஸ் பாதித்தால் இரண்டு நாட்களிலேயே குணமாகிவிடும்.

இருப்பினும் கடந்த சில தினங்களாகவே இந்த வைரஸ் பரவல் கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பானது 12000 என்ற அளவில் இருக்கிறது. இது 50,000 என்று அளவிற்கு கூட உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிபுணர்கள் இதில் மாறுபட்டுள்ளனர். அதாவது மே மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும் இன்னும் சுமார் பத்து நாட்களில் இந்த கொரோனா வைரஸ் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

அதன் பிறகு இதனுடைய தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது. கேரளா, மராட்டியம்,டில்லி, உத்தரபிரதேசம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!