Skip to content
Home » தேயிலை தோட்ட தொழிலாளர் மின்சார டவர் மீது ஏறி தர்ணா… கோவை அருகே பரபரப்பு

தேயிலை தோட்ட தொழிலாளர் மின்சார டவர் மீது ஏறி தர்ணா… கோவை அருகே பரபரப்பு

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பாரீ ஆக்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் வீரமணி வயது 57 இவரது மனைவி ராணி அதே பகுதியில் கடந்த 37 ஆண்டுகளாக நிரந்தர பணியாளராக பணி செய்துள்ளார். தன்னுடைய மனைவி கண் எதிரி மின்கோபுரம் மீது நின்று இருப்பதைப் பார்த்த மனைவி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது நேற்று இவர் பணியின் போது அனைத்து தேயிலை நிறுவனமும் காலை பத்தரை மணி அளவில் தேநீர் வழங்குவது தொன்று தொட்டு உள்ள வழக்கம் நேற்று அவருக்கு தேநீர் வழங்கிய நிர்வாகத்திற்கு கைக்கூலியாக இருக்கும் தன்ராஜ் வயது 62 இவர் அதே பகுதியில் நிரந்தரப் பணியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர் இவரை நிர்வாகம் மீண்டும் பணிக்கு அமர்த்தி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தேநீர் வழங்க நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று இவர் மதியம் ஒரு மணி அளவில் தேநீர் வழங்கியதால் வீரமணி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தினால் தன்ராஜ் நிர்வாகத்தில் அவரை தவறுதலாக கூறியதன் பேரில் இன்று காலை அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இரண்டு நடவடிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதாலும் நிர்வாகம் பல முறைஅவரை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படடதால் மன அழுத்தம்காரணமாக அவர் தேயிலை ஆலை அருகாமையில் உள்ள high power உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தர்ணாவில் ஈடுபட்டார் இதனை அறிந்த வால்பாறை காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் அவரை இறங்கச் சொல்லி வலியுறுத்தியும் இறங்க மறுத்து டவர் மீது ஒரு மணி நேரம் உட்கார்ந்துள்ளார் உடனடியாக சம்பந்தப்பட்ட ட தேயிலைத் தோட்ட தொழிலாளர் நலவாரிய ஆணையாளரை வரவேண்டும் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார். அப்பகுதியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை எவ்வளவு அறிவுறுத்தியும் அதைஏற்க மறுத்து மேலே யாரும் ஏறி வந்தால் மின்னழுத்த கம்பியை தொட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என்று திகைத்தனர் உடனடியாக தொழிலாளர் நல ஆணையாளர். வந்து பேச்சு வார்த்தைக்கு பின்னர் அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார் அதன் பின்னர் அவரை தீயணைப்பு வாகனத்தில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!