Skip to content
Home » மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் நலன் கருதி சாலை ஓரபூங்கா அமைத்து தர வேண்டும் என  திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனருக்கு பாரதியார் மக்கள் நலச்சங்கம்-மற்றும் பொதுமக்கள் சார்பில் அறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியதாவது…. திண்டுக்கல் ரோடு தீரன் நகரில் அரியார் பாலத்திற்கு முன்பாக அரியாற்றின் தென்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் அங்குள்ள கடைகள் மதுபார்களின் கழிவுகள், சொல்லிக் கொள்ள முடியாத துர்நாற்றம் கொண்ட குப்பைகளையும், பிளாஸ்டிக் பொருள்களையும் கொட்டிகிடக்கின்றது.  மேலும் தீரன் நகர் – திண்டுக்கல் மெயின் சாலையில் சிதறி கிடப்பதாலும் கடும் நோய்களை பரப்பும் துர்நாற்றம் ஆகியவைகளை அனைத்து மக்களும் சகித்துக் கொண்டு செல்வதுடன் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்கொண்ட மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் காலியாக கிடக்கும் இந்த இடத்தை வெளிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கின்றனர். ஆகவே தாங்கள்  இடத்தை பார்வையிட்டு தீரன் நகர் சிறுவர்கள், முதியோர் பொழுதுபோக்கு இடமாகவும் விளையாட்டு பூங்காவாகவும்அமைத்து மாசுபடியாக சுகாதாரத்துடன் கூடிய இடமாக அமைப்பதுடன் அறியார் கரையை பாதுகாத்திடவும் வேண்டுகிறோம் என இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!