Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று 3 மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், லும்லா (அருணாசலபிரதேசம்), ராம்கார் (ஜார்கண்ட்), ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), சாகர் திகி (மேற்கு வங்காளம்), கஸ்பாபேத் மற்றும் சிஞ்ச்வாடு (மராட்டியம்) ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின. நாகாலாந்தில் முதல்-மந்திரி நைபியு ரியோ தலைமையில் என்.டி.பி.பி. ஆட்சி நடக்கிறது. இங்கு என்.டி.பி.பி-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!