Skip to content
Home » சிபிஐ தலைவர்கள் மீது பொய் வழக்கு….பாபநாசம் போலீஸ் ஸ்டேசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

சிபிஐ தலைவர்கள் மீது பொய் வழக்கு….பாபநாசம் போலீஸ் ஸ்டேசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிவுச் செய்யும் பாபநாசம் ஊரக காவல் நிலையங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க தலைவர் இளங்கோவன், மாதர் சங்க செயலாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற் குழு சிவகுரு, மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான டெல்லி பாபு கண்டன உரையாற்றினார். அவர் பேசும் போது தமிழகத்திற்கு, தென்னிந்தியாவிற்கு உணவு களஞ்சியமாக இருக்கக் கூடிய பூமி. இந்த பூமிக்கு வரலாறு உண்டு. வாச்சாத்தி சம்பவத்தில் 19 வருடம் வழக்கைச் சந்தித்தோம்.

பாபநாசம் காவல் துறை மோசமாக நடந்துக் கொண்டுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும். பாபநாசம் டி.எஸ்.பி செங்கொடி இயக்கம் குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். மாவட்டக் குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றியச் செயலாளர் முரளிதரன் மீதான வடிக்கைத் திரும்பப் பெற வேண்டும். இதில் நியாயமான நடவடிக்கை எடுக்கப் பட வில்லை என்றால், நீதி கிடைக்கும் வரை, நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டோம். என்றார். இதில் மாவட்டக் குழு காதர் உசேன், விவசாய சங்க ஒன்றியக் குழு ராமதாஸ், ஒன்றியக் குழு சேக் அலாவுதீன், முருகேசன், ஜார்ஜ், செல்வகுமார், செல்வமேரி உட்பட கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!