Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்-சௌமியா அன்புமணி

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என சௌமியா அன்புமணி பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூக நீதி சர்வே அவசியம். சமூக நீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்கிற அறிவிப்பு வந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள போதை பழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படையாக மதுப்பழக்கம் உள்ளது. எனவே மதுவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இவற்றை ஒழிக்க முடியும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்களுக்கு மதுவை ஒழித்தால் மட்டுமே தீர்வு. சிங்கப்பெண் படைக்கு தனியாக டிஜிபியை நியமிக்க வேண்டும். மகளிர் நீதிமன்றங்களை அதிகரித்து, பாலியல் வழக்குகளில் விரைந்து தீர்வு காண வேண்டும்” என்றார்.

error: Content is protected !!